/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சந்தையில் காய்கறி விலை சரிவு
/
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சந்தையில் காய்கறி விலை சரிவு
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சந்தையில் காய்கறி விலை சரிவு
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சந்தையில் காய்கறி விலை சரிவு
ADDED : ஆக 22, 2011 11:37 PM
தேனி : தேனி மாவட்டத்தில் லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறி விலைகள்
சரிந்துள்ளன.
அதேசமயம் சரக்குகள் தேங்கவில்லை.தேனி மாவட்டத்தில் உள்ள 958
லாரிகளில் 56 சதவீதம் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. குறுகிய தூரம்
இயக்கப்படும் லாரிகள் எல்லாம் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. எனவே இந்த
லாரிகள் மூலம் தேனி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள் மதுரை உட்பட பக்கத்து
நகரங்களுக்கும், பக்கத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் காய்கறிகள் தேங்கவில்லை.இருப்பினும் சென்னை, பெங்களூர், திருச்சி,
கோவை உட்பட தொலைதூர நகரங்களில் இருந்து காய்கறிகள் வாங்க வியாபாரிகள்
வரவில்லை. எனவே மார்க்கெட்டில் போட்டி குறைந்துள்ளது. இதனால் எல்லா
காய்கறிகளின் விலைகளும் 10 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது