ADDED : செப் 06, 2011 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : வ.உ.சி., பிறந்த நாளையொட்டி, கெங்குவார்பட்டியில் தமிழ்நாடு வ.உ.சி., இளைஞர் பேரவை பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
வேளாளர் உறவின் முறை தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் பஞ்சாட்சாரம் முன்னிலை வகித்தார். இளைஞர் பேரவை தலைவர் வேல்முருகன் வரவேற்றார். பெரியகுளம் வட்டார வேளாளர் பெருமக்கள் சங்க தலைவர் சிதம்பர சூரியவேலு பெயர் பலகையை திறந்து வைத்தார். வட்டார செயலாளர் குழந்தை முருகப்பன், பொருளாளர் சுப்பையா உட்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் பேரவை செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.