/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவச மிக்சி-கிரைண்டர் செப். 20 க்குள் துவக்க விழா
/
இலவச மிக்சி-கிரைண்டர் செப். 20 க்குள் துவக்க விழா
ADDED : செப் 13, 2011 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அனைத்து மாவட்டங்களிலும், மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை செப்., 20 க்குள் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரிசி பெறும் ஒரு கோடியே 84 லட்சத்து 84 ஆயிரத்து 808 குடும்பங்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு 2012 பிப்., இறுதிக்குள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
நாளை(செப்., 15) முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். மாணவர்களுக்கு லேப் டாப், விவசாயிகளுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டமும் துவக்கப்படுகிறது. மாவட்ட அளவில் துவக்க விழாவை செப்., 20க்குள் நடத்த அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.