ADDED : செப் 20, 2011 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்:இடுக்கி அணை அருகே தோப்புராங்குடி, முருக்காச்சேரி, கட்டப்பணை
அருகே தங்கமணி ஆகிய இடங்களில் கடந்த 18ம்தேதி இரண்டு முறை லேசான
நிலநடுக்கம் ஏற்பட்டது.
2.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால்
எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று காலை 8.10 மணிக்கு 1.8
ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை பொதுமக்கள் உணர்ந்த
போதிலும், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.