/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சியில் சிம்பிள் "பிரிவுஉபச்சாரம்'
/
கம்பம் நகராட்சியில் சிம்பிள் "பிரிவுஉபச்சாரம்'
ADDED : செப் 21, 2011 11:04 PM
கம்பம் : கம்பம் நகராட்சி தலைவர்அம்பிகா.
துணை தலைவர் செந்தில்குமார். தலைவர் மற்றும் துணை தலைவர் தி.மு.க., வை சேர்ந்தவர்கள்.இவர்களும், கவுன்சிலர்களும் பங்கேற்ற பிரிவுபச்சார விழா அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்டது. எளிமையாக நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு நகர் முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர அழைக்கவில்லை. சுவீட், காரம், காபி என முடித்துக் கொண்டனர். கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பலர் இந்த கூட்டத்தில் பேசியுள்ளனர். தி.மு.க.,வினர் அதிகம் இருந்த கவுன்சிலுக்கு பிரிவுபச்சார விழா நடத்தியது தெரிந்தால், ஆளும் கட்சியின் 'பார்வைக்கு' ஆளாக நேரிடும் என்பதால் அதிகாரிகள் இம்முடிவு எடுத்ததாக தெரிய வந்துள்ளது.