/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எஸ்.பி., அலுவலக ஊழியர் மீது வழக்கு
/
எஸ்.பி., அலுவலக ஊழியர் மீது வழக்கு
ADDED : செப் 21, 2011 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேவதானப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா.
இவர் எஸ்.பி., அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அல்லிநகரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணிக்கும் கடந்த நவம்பரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் ராஜேஷ்கண்ணாவின் சித்தி சிட்டுப்பிள்ளை, தம்பி பிரபு ஆகியோர் கூடுதல் நகை, பணம் கேட்டு கிருஷ்ணவேணியை கொடுமை செய்துள்ளனர். மகளிர் போலீசார் ராஜேஷ்கண்ணா, சிட்டுப்பிள்ளை, பிரபு மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.