/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பள்ளத்தால் விபத்து அபாயம்
/
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : பிப் 25, 2024 04:10 AM

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் கம்பம் பஸ்கள் செல்லும் இடத்தில் தோன்றியுள்ள ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் ஆட்டோ பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்
இப்பஸ் ஸ்டாண்டில் நாள்தோறும் 860க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் அரசு, தனியார் நிறுவனங்கள், விவசாய, கட்டடப் பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், அலுவலர்கள் பழயை பஸ் ஸ்டாண்டிற்கு டூவீலர்கள், ஆட்டோவில் வருகின்றனர்.
இங்குள்ள ராட்சத பள்ளத்தாலும், இரவில் அருகில் உள்ள உயர்கோபுர ஹைமாஸ் விளக்கு எரியாமல் போதிய வெளிச்சம் இல்லாததால் பள்ளத்தில் விழுந்து காயமடைவது தொடர்கிறது.ரோடு, ைஹமாஸ் விளக்கு சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.