/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அவசரகதியில் பயன்பாட்டிற்கு வந்த தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்
/
அவசரகதியில் பயன்பாட்டிற்கு வந்த தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்
அவசரகதியில் பயன்பாட்டிற்கு வந்த தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்
அவசரகதியில் பயன்பாட்டிற்கு வந்த தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்
ADDED : செப் 20, 2025 04:35 AM

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் பணிகள் முழுவதும் முடிவடையாமல் அவசர கதியில் பயன்பட்டிற்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ராஜவாயக்கால் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து இருந்த கட்டுமானங்களை அகற்றி புதிதாக கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.
இதனால் அனைத்து பஸ்களும் மதுரை ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றனர். தற்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ள நிலையில் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்களை அனுமதித்தனர்.
அங்கு வடக்கு நுழைவாயில் பகுதியில் இருந்த நிழற்கூரை செட் அகற்றிய இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது.
இதில் பஸ்கள் செல்லும் போது பயணிகள் சிரமம்படுகின்றனர். அதே போல் மேற்கு நுழைவாயிலிலும் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றனர். இதில் தடுமாறி பயணிகள் கீழே விழுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் கட்டட பகுதிகளில் கான்கீரிட் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுகிறது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் பள்ளங்களை சீரமைத்தும், சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.