/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.5 லட்சத்திற்கு செக் வழங்கி ரூ.42 லட்சம் நிலம் மோசடி நால்வர் மீது தேனி போலீசார் வழக்கு

ADDED : நவ 07, 2024 02:14 AM
தேனி:தேனியில் ரூ.42 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரூ.5 லட்சத்திற்கான செக் வழங்கி பத்திரம் பதிவு செய்து ஏமாற்றிய நால்வர் மீது தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே மாரியம்மன்கோயில்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 சென்ட் மற்றும் 14 சென்ட் நிலமும், இவரது தம்பி மனைவி ஜோதிக்கு 15 சென்ட் நிலமும் இருந்தன.
இவர்களது நிலத்திற்கு அருகே உள்ளவர்கள் குறைந்த விலைக்கு நிலத்தை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் இருவரது ரூ.42.84 லட்சம் மதிப்பிலான 59 சென்ட் நிலத்தை, தேனி அடுத்த கெப்புரெங்கன்பட்டி மணிராஜனுக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தனர்.
கணேசனின் 30 சென்ட் நிலத்தை மணிராஜன் சென்னை மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரனுக்கு கிரையம் செய்தார்.
கிரையத்தின் போது ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கியதாக ஆவணத்தில் பதிவு செய்தனர்.
அதே காசோலை எண்களை மீதியுள்ள 14சென்ட், ஜோதியின் 15 சென்ட் நிலங்களின் ஆவணத்திலும் பதிவு செய்து மொத்த இடத்தையும் கிரையம் பெற்றனர்.
கிரையம் பெற்ற நிலத்தை வெங்கடேஸ்வரன் போடியில் வசிக்கும் தங்கை பிரியாவிற்கு தான் செட்டில்மென்ட் எழுதி வழங்கினார். ஆனால் கணேசனுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கவில்லை.
இதுபற்றி கேட்ட கணேசனுக்கு மணிராஜன், வெங்கடேஸ்வரன், பிரியா, வெங்கடேஸ்வரன் சகோதரர் பழனிசெட்டிபட்டி மகேஷ் இணைந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
கணேசன் புகாரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.