/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை வாங்கித் தருவதாக யார் கூறினாலும் நம்ப வேண்டாம்; தேனி எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
/
அரசு வேலை வாங்கித் தருவதாக யார் கூறினாலும் நம்ப வேண்டாம்; தேனி எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
அரசு வேலை வாங்கித் தருவதாக யார் கூறினாலும் நம்ப வேண்டாம்; தேனி எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
அரசு வேலை வாங்கித் தருவதாக யார் கூறினாலும் நம்ப வேண்டாம்; தேனி எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
ADDED : மே 03, 2025 06:18 AM

தேனி : மாநிலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்வதில் மாநிலத்தில் தேனி மாவட்டம் 2வது இடத்தில் உள்ளதால் படித்த வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் பணம்கொடுத்து ஏமாற வேண்டாம்,' என, தேனி எஸ்.பி.,சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட குற்றப்பிரிவில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., உட்பட 18 க்கும் மேற்பட்ட போலீசார்பணியில் உள்ளனர். இப்பிரிவில் கடந்த 2024ல் 38 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில்16 வழக்குகள், மத்திய மாநில அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்து அப்பாவிபட்டதாரி இளைஞர்கள், படித்த பெண்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். கடந்த 4 மாதங்களில் 6 மோசடி வழக்குகள்பதிவாகியுள்ளன. மாநில குற்றப்பதிவேட்டுத்துறை தரவுகளில் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாகஏமாற்றி பணம் பெற்று, போலி அரசுத்துறை பணிஆணைகளை தயார் செய்து, ஏமாற்றி பணம் பெற்று நடந்துள்ள மோசடிகள் அதிகளவில் தேனிமாவட்டத்தில் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி சென்னைக்குஅடுத்து தேனி மாவட்டம் 2வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படித்த இளைஞர்கள்,இளம்பெண்கள், அவர்தம் பெற்றோர்களுக்கு எஸ்.பி., சிவபிரசாத் முன் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி, எச்சரித்துள்ளார்.
தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக அவர் பேசியதாவது:
கடந்த 16 மாதங்களில் வேலை வாங்கித் தருவதாக தேனி மாவட்டத்தில் பதிவான வழக்குகளின்எண்ணிக்கை.
மாவட்ட குற்றப்பிரிவில் கடந்தாண்டு மொத்தம் பதிவான 38 வழக்குகளில்16 வழக்குகள், ஜாப் ராக்கெட்டிங்' என்றழைக்கக்கூடிய வேலை வாய்ப்பு மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் புகார் தாரர்கள் இழந்த தொகை ரூ.13.28 கோடி . மாவட்டத்தில் படித்தஇளைஞர்கள், இளம்பெண்கள் பணம் கொடுத்தால் மத்திய, மாநில அரசு வேலை கிடைக்கும்என கண்மூடித்தனமாக நம்புவதால் இம்மாதிரியான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
எத்தனை பேர் இவ் வழக்குகளில் கைதாகியுள்ளனர்.
16 வழக்குகளில்20க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களைகைது செய்யவும், அவர்களின் வங்கி கணக்குகள் ஆராயப்பட்டு, முடக்கவும் பணிகள்நடந்து வருகின்றன.
போலி ஆணைகள் வழங்கி ஏமாற்றும் நபர்கள் அந்த ஆணைகளை எவ்வாறு தயாரிக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் ஜெனரேட்டிங்' மூலம் இந்த போலி ஆணைகள் தயாரிக்கப்படுகின்றன. அவைதயாரிக்கப்படுவதில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் மையங்களுக்கு தொடர்பு உள்ளதா எனவும்விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் அலுவலக உதவியாளர்வேலைக்கு ரூ.3 லட்சம், அலுவலர் இளநிலை எழுத்தர் பணியிடம் என்றால் ரூ.5 லட்சம்முதல் ரூ.7 லட்சம் வரை, வேலைக்கு தகுந்த மாதிரி பணம் பறித்து ஏமாற்றப்பட்டு உள்ளனர். பி.இ., பி.டெக்., தொழில்நுட்ப பட்டப்படிப்பு என்றால் ரூ.15 லட்சம்முதல் அவர்கள் இஷ்டத்திற்கு பணம் கேட்டு ஏமாற்றி உள்ளனர்.
இந்த மோசடி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதா
கல்லுாரி, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்புகார்தார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தேனி மாவட்ட சமூக வலைதளம்,இணையத்தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாவட்ட குற்றப்பிரிவு தவிர பிற போலீஸ் ஸ்டேஷன்களிலும் அவ்வப்போதுஒன்றிரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதனால் பொது மக்கள் எச்சரிக்கை உணர்வுடன்,படித்து முறையாக நேர்காணல் சென்று பணிக்கு செல்ல வேண்டும். மத்திய மாநில அரசுதுறைகளில் எவ்வாறு அரசு பணிகள் நிரப்பப்படுகின்றன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
போலீசார் சொந்த வீட்டுத் திட்டத்திற்கு இன்னும் இடம் தேர்வு செய்ய வில்லையே
இதுகுறித்து என் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன.விரைவில் இடம் தேர்வுக்கு பின் கட்டுமானப்பணிகள் துவக்கப்படும்.