ADDED : டிச 30, 2025 05:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மதுரையில், கடந்த டிச.,27, 28 தேதிகளில், தமிழ்நாடு அகில உலக தமிழ் கவிஞர்கள் அறக்கட்டளை, இமைக்கா விழிகள் கவிப்பூஞ்சோலை கவிஞர்கள் குழுமம் மற்றும் அட்கா உலக சாதனைப் புத்தக நிறுவனம் இணைந்து 'முத்தமிழ்க் கலை இலக்கிய திருவிழா -2025' நிகழ்ச்சியை நடத்தியது.

இதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியர் எஸ்.பி.செல்வராஜ் என்பவருக்கு 'கவியரசு கண்ணதாசன் விருது -2025' வழங்கப்பட்டது. இதனை ஆவடிக்குமார் என்பவர் வழங்கினார். மேலும், 22 மணி நேர 'தமிழ்க் கலை மற்றும் இலக்கிய மாநாடு உலக சாதனை' நிகழ்வில் பங்கேற்றமைக்காக எஸ்.பி.செல்வராஜ்க்கு 'உலக சாதனைப் பங்கேற்பாளர்' சான்றிதழும் வழங்கப்பட்டது.

