/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி வைகை அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
/
தேனி வைகை அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
தேனி வைகை அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
தேனி வைகை அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
ADDED : ஜூலை 12, 2025 04:13 AM

தேனி: தேனி வைகை அரிமா சங்கத்தின் 32வது பதவியேற்பு விழா நடந்தது. தலைவர் ராஜேந்திரா பைப்ஸ் உரிமையாளர் கணேஷ், செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் கணேசன் ஆகிய நிர்வாகிகளுக்கு அரிமா சர்வதேச பகுதித் தலைவர் பாண்டியராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் ஆளுநர் ரவீந்திரன் புதிய உறுப்பினர்களை அரிமா சங்கத்தில் இணைத்து வைத்தார். அரிமா நிர்வாகிகள் மோகன் சிங், ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சுப்புராஜ், ராதாகிருஷ்ணன், பெஸ்ட் ரவி ஆகியோர் சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தனர். நிர்வாகிகள் ஜெகதீஸ், ராஜ்மோகன், நவநீதன், ராஜேஸ்கண்ணா, சுதந்திரராஜன், கண்ணன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் பாண்டியராஜ், சன்னாசி, முத்துக்கோவிந்தன், குமார், செல்வகணேஷ், சுப்பிரமண்யம், மாணிக்கம், நாகராஜன், செந்தில்குமரன், நாராயணபிரபு, லோகநாதன், பவுன்ராஜ், துரைவேணுகோபால், செல்வவிநாயகம், ஜவஹர், மணிவாசகம், குலோத்துங்கன், வர்த்தக பிரமுகர்கள் ஜீவா, செந்தில்குமார், சுப்புராஜ், கேசவன், முத்துசெந்தில்குமார், கார்த்திகேயன், பிரபு, ரவிச்சந்திரன், பாலபிரகாஷ், ஜோசப், பிரகாஷ், டாக்டர்கள் அறவாழி, வேல்முருகன், ஜேசுதாஸ் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுவாழ்த்தினர். முன்னாள் தலைவர் சரவணராஜா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.