/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி வாலிபர் கொலை சம்பவம்; 3 பேரிடம் தனிப்படை விசாரணை
/
தேனி வாலிபர் கொலை சம்பவம்; 3 பேரிடம் தனிப்படை விசாரணை
தேனி வாலிபர் கொலை சம்பவம்; 3 பேரிடம் தனிப்படை விசாரணை
தேனி வாலிபர் கொலை சம்பவம்; 3 பேரிடம் தனிப்படை விசாரணை
ADDED : நவ 30, 2024 06:25 AM
விழுப்புரம்; தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த், 25; இவர், நேற்று முன்தினம் மதியம் விழுப்புரம் புறவழிச்சாலை, விராட்டிக்குப்பம் - கொட்டப்பாக்கத்துவெளி சர்வீஸ் சாலையோரம் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது உறவினர்களை வரவழைத்து, நேற்று விசாரணை நடத்தினர்.
பின்னர், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கேமரா பதிவு மற்றும் மொபைல் போன் சிக்னல்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவலில், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தேனியை சேர்ந்த இருவர் என, மூவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அரவிந்தை முன்விரோதம் காரணமாக, திட்டமிட்டு அவரை காரில் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு, விழுப்புரம் பைபாஸ் சாலையில் வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
கொலை எப்படி நடந்தது, அதில் யார், யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்த விசாரித்து வருகின்றனர்.