/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராயப்பன்பட்டி பகுதியில் போதை பாக்குகள் விற்பனை தாராளம்
/
ராயப்பன்பட்டி பகுதியில் போதை பாக்குகள் விற்பனை தாராளம்
ராயப்பன்பட்டி பகுதியில் போதை பாக்குகள் விற்பனை தாராளம்
ராயப்பன்பட்டி பகுதியில் போதை பாக்குகள் விற்பனை தாராளம்
ADDED : நவ 09, 2024 06:27 AM
கம்பம், : ராயப்பன்பட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பாக்குகள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது.
கள்ளச்சாராயம், கஞ்சா விற்கு இணையாக லாபம் கிடைப்பதால், ராயப்பன் பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
பள்ளிகளுக்கு அருகில் கூல் லிப் எனும் போதை தரும் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையினர் ரெய்டு நடத்தினாலும், அபராதத்தை கட்டி விட்டு, மறுநாளே விற்பனையை துவக்கி விடுகின்றனர்.
ராயப்பன்பட்டி,ஆனைமலையன் பட்டி, சின்ன ஒவலாபுரம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் புகையில், போதை பாக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தடுக்க போலீசார் களத்தில் குதித்தால் தான் முடியும். முதலில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளை கண்காணிக்க வேண்டும். ராயப்பன்பட்டி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்கள் கூடுதல் கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.
கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது தான். இருந்தாலும் குட்கா விற்பனையை தடுக்க ஏனோ ஆர்வம் காட்டவில்லை கவனம் செலுத்த வேண்டும்.