/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு நீர்வரத்து இல்லை நீர்மட்டம் 127 அடியாக குறைந்தது
/
முல்லைப் பெரியாறு நீர்வரத்து இல்லை நீர்மட்டம் 127 அடியாக குறைந்தது
முல்லைப் பெரியாறு நீர்வரத்து இல்லை நீர்மட்டம் 127 அடியாக குறைந்தது
முல்லைப் பெரியாறு நீர்வரத்து இல்லை நீர்மட்டம் 127 அடியாக குறைந்தது
ADDED : செப் 28, 2024 02:50 AM
கூடலுா:முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்தின்றி நீர்மட்டம் 127 அடியாக குறைந்தது. எனவே தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் செப்.13ல் அதிகபட்சமாக 132 அடியை எட்டியது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையால் 140 அடி வரை எட்டிய நிலையில், இந்த ஆண்டு மழை குறைவு காரணமாக 136 அடியை கூட கடக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மழை கூடுவதும் பின் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை.
தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1555 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நீர் திறப்பாலும், நீர்வரத்து இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் 127 அடியாக குறைந்தது. (மொத்த உயரம் 152 அடி). இந்த நிலை நீடித்தால் நவம்பரில் துவங்க உள்ள இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால் தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அணையில் நீர் இருப்பு 4071 மில்லியன் கன அடி.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்களில் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.