/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்டில் செயின் பறித்த திருடன் கைது
/
பஸ் ஸ்டாண்டில் செயின் பறித்த திருடன் கைது
ADDED : நவ 04, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : போடி குலசேகரபாண்டியன் தெற்கு தெரு பாலசுப்பிரமணி 33. நேற்று புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவர், முட்புதர் பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை பவுன் தங்கச் செயினை, ஒருவர் பறித்துக்கொண்டு ஓட முயற்சித்தார்.
பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணிகள் உதவியுடன், திருடனை பிடித்து, தேனி போலீசில் ஒப்படைத்தார். திருடிய நபர் தேனி பங்களாமேடு பிரபு 24 என தெரியவந்தது. பிரபுவை போலீசார் கைது செய்தனர்.