ADDED : மார் 17, 2024 06:34 AM
சின்னமனூர்: சின்னமனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பழமையும் பெருமையும் கொண்டது.
பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பதும், பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பதும் சிறப்பாகும் . இந்த கோயிலில் பங்குனியில்   பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு நடக்கும். நேற்று முன்தினம் சுதர்சன - ஹோமம் நடைபெற்றது.
நேற்று காலை 10 மணியிலிருந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெண் பட்டில்  லட்சுமி நாராயணா பெருமாளும், பச்சைப் பட்டில் சீதேவி பூதேவியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.  காலை 11:30 மணியளவில்  மங்கல வாத்தியங்கள் முழங்க பெருமாள் - தேவியரின் கழுத்தில் மங்கல நாண் சூடினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னமனூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். செயல் அலுவலர் நதியா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

