/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனசாட்சியுடன் புகார் அளிக்க வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனில் திருக்குறள் போர்டு: ஜெயமங்கலம் எஸ்.ஐ.,யின் வித்தியாசமான முயற்சி

UPDATED : ஏப் 11, 2025 07:09 AM
ADDED : ஏப் 11, 2025 02:51 AM

தேவதானப்பட்டி:'போலீஸ் ஸ்டேஷனில் மனச்சாட்சியுடன் புகார் அளிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் திருக்குறளை பிளக்ஸ் பேனரில் எஸ்.ஐ., முருக பெருமாள் எழுதி வைத்துள்ளார்.
பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் 20 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட பிளக்ஸ் பேனரில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் 13 வது அதிகாரம் 'அடக்கம் உடைமை' யில் 123 வது குறள்
' செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடக்கப் பெறின்' என்ற குறளையும்,
கருத்து 'அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி நடந்தால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.' என பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.ஐ., முருகப்பெருமாள் கூறுகையில்,' போலீஸ் ஸ்டேஷனுக்கு உண்மையாக புகார் கொடுக்க வருபவர்கள், உண்மைக்கு புறம்பாக புகார் கொடுக்க வருபவர்கள் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாது. விசாரணைக்கு பிறகே எது உண்மை, எது பொய் என தெரியும். அதன் பின் வழக்கு பதிந்து விசாரிக்கப்படும். ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருவோர் உள்ளே நுழையும் போதே இத் திருக்குறளை படித்து விட்டு 'மனசாட்சியோடு' செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என கருதி திருக்குறள் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த பேனர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
--