/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருவோண விரதம் நடராஜருக்கு அபிஷேகம்
/
திருவோண விரதம் நடராஜருக்கு அபிஷேகம்
ADDED : ஏப் 23, 2025 07:45 AM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவநாயானார் கோயிலில் திருவோண விரதத்தை முன்னிட்டு நேற்று மாலை கணபதி ஹோமம் நடந்தது.
நடராஜருக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜர், சிவகாமி, அம்மன்,மாணிக்கவாசகருக்கு மஞ்சள்பொடி, மா பொடி, திருமஞ்சன திரவியம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, எலுமிச்சை, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர், விசிலாட்சி, முனையடுவநாயனார், சண்டிகேஸ்வரர், நால்வர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தீபாரதனைகள் நடந்தது.
சிவனடியார்கள் திருமுறைகள் பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

