/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடைக்கானல் செல்ல சோதனை சாவடியில் ஆய்வு; இ -பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

ADDED : ஏப் 02, 2025 06:39 AM

தேவதானப்பட்டி : கொடைக்கானல் செல்ல நேற்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டம், காமக்காபட்டி சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
தேவதானப்பட்டி அருகே காட்ரோட்டிலிருந்து டம்டம்பாறை வழியாக கொடைக்கானல் 55 கி.மீ., தூரத்தில் உள்ளது. தற்போது கோடை வெயில் தாக்கத்தால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிகளவில் செல்கின்றனர்.சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நேற்று முதல் இபாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் எல்கை முடிவு பெறும் பகுதியாகவும், காமக்காபட்டி சோதனை சாவடி உள்ளது. இங்கு திண்டுக்கல், தேனி மாவட்டம் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் நகராட்சி பணியாளர்கள் இ-பாஸ் ஆய்வு செய்து வாகனங்களை அனுமதித்தனர். இதில் வார நாட்களில் தினமும் 4 ஆயிரம் வாகனங்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 ஆயிரம் வாகனங்கள் என எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும் இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.