/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் மூன்று பேர் குற்றவாளிகள்; போக்சோ நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜன 30, 2024 07:06 AM
மூணாறு : இடுக்கி மாவட்டம் பூப்பாறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மூன்று பேரை குற்றவாளிகள் என தேவிகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பூப்பாறை அருகில் உள்ள கஜானா பாறையில் ஏலத்தோட்டத்தில் வேலை செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகள் தனது ஆண் நண்பருடன் 2022 மே 29ல் பூப்பாறைக்கு சென்றார்.
அங்குள்ள தேயிலை தோட்டம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சிறுமியை பூப்பாறையைச் சேர்ந்த அரவிந்த் 22, சாமூவேல் 19, சிவகுமார் 19, சுகந்த் 22, மற்றும் இரு சிறுவர்கள் ஆகியோர் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு வலுக்கட்டாயமாக தேயிலைத் தோட்டத்தில் வேறு பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
சாந்தாம்பாறை போலீசார் ஆறு பேரையும் கைது செய்தனர். இரு சிறார் மீதான வழக்கு தொடுபுழாவில் நடந்து வரும் நிலையில் எஞ்சிய நால்வர் மீதான வழக்கு தேவிகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அரவிந்த் தவிர மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி சிராஜுதீன் நேற்று உத்தரவிட்டார்.
மூவருக்கும் தண்டனை என்ன என்பது இன்று தெரியவரும்.