/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய மூவர் கைது
/
தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய மூவர் கைது
ADDED : அக் 06, 2025 04:01 AM

மூணாறு : மூணாறில் வாகனங்கள் உரசியது தொடர்பாக தமிழக சுற்றுலாப் பயணிகளை தாக்கிய பள்ளிவாசல் எஸ்டேட், ஆற்றுக்காடு பகுதியைச் சேர்ந்த கவுஷிக் 21, சுரேந்திரன் 22, அருண் 18, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்த ஓட்டல் நிர்வாகம் படிக்கும் மாணவர்கள் ஏழு பேர் கொண்ட குழு மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்தனர். ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்புகையில் எதிரே வந்த டூவீலரில் கார் உரசியது. பயணிகள், டூவீலரில் சென்றவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு பள்ளிவாசல் எஸ்டேட் பகுதிக்கு வந்த காரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்தவர்கள் வழிமறித்து கல்லால் தாக்கியதுடன் காரையும் சேதப்படுத்தினர். அதில் சுற்றுலாப் பயணிகள் அரவிந்த் 22, ஞானசேகரன் 22, ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூணாறில் டாடா மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் பள்ளிவாசல் எஸ்டேட், ஆற்றுக்காடு பகுதியைச் சேர்ந்த கவுஷிக் 21, சுரேந்திரன் 22, அருண் 18, ஆகியோரை மூணாறு போலீசார் கைது செய்தனர்.