/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
46 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய மூவர் கைது
/
46 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய மூவர் கைது
ADDED : அக் 25, 2025 01:00 AM
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் காரில் 46 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திராவை சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம் பைபாஸ் ரோட்டில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ. நாகராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தேனியில் இருந்து கம்பம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 46.500 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரிந்து அதனை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4.60 லட்சம்.
மேல்விசாரணையில் அதனை கடத்தியது திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் 29, ஆந்திரா, கோதாவரி மாவட்டம், திம்மாபுரம் ராமலட்சுமி 38, துர்காபிரசாத் 18, மற்றும் 16வயது சிறுவன் என தெரிந்தது. இதில்சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீசார் மற்ற மூவரையும் கைதுசெய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

