/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கட்டுமான பொருட்கள் திருடிய மூவர் கைது
/
கட்டுமான பொருட்கள் திருடிய மூவர் கைது
ADDED : பிப் 07, 2024 12:35 AM
போடி : போடி அருகே தென்றல் நகரில் வசிப்பவர் சத்தீஸ்வரன் 34., பில்டிங் காண்ட்ராக்டர்.
இவர் கரட்டுப்பட்டி அருகே ஜெய் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதன் அருகே கட்டுமான பொருட்களை வைத்துள்ளார். நேற்று முன்தினம் பார்த்த போது 47 இரும்பு சீட்டுகள், 2 மோல்டு சீட்டுகள் திருடு போனது தெரிந்தது. சக்தீஸ்வரன் போலீசாரிடம் புகார் கொடுக்க சென்ற போது, வீடு கட்டும் இடத்தில் கட்டுமான பொருட்களை சிலர் திருடி கொண்டிருப்பதாக வீட்டின் எதிரிரே குடியிருக்கும் பாலசுப்பிரமணி என்பவர் சக்தீஸ்வரனுக்கு அலை பேசியில் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்தில் திருடி கொண்டிருந்த போடி சர்ச் தெருவை சேர்ந்த கார்த்திக் 30. தமிழ்செல்வன் 27., அம்மாகுளத்தை சேர்ந்த சேக்பரீத் 31. மூவரையும் பிடித்து, திருடிய பொருட்களுடன் போலீசாரிடம் சத்தீஸ்வரன் ஒப்படைத்தார்.போலீசார் கார்த்திக், தமிழ்செல்வன், சேக்பரீத் மூவரையும் கைது செய்தனர்.

