/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரிவாளால் வெட்டி மிரட்டல் மூவர் கைது
/
அரிவாளால் வெட்டி மிரட்டல் மூவர் கைது
ADDED : பிப் 13, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெரு பழைய இரும்பு கடை வியாபாரி பொன்ராம் 48. அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, இவரது நண்பர்கள் தங்கப்பாண்டி, வசந்த், அழகு விஜய், காமராஜ், காசி ஆகிய ஆறு பேர் மது குடித்துவிட்டு சாவடி அருகே அவதூறாக பேசிக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு அறிவுரை கூறிய பொன்ராமை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தி, கம்பியால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
தேவதானப்பட்டி எஸ்.ஐ., தேவராஜ் மாரிமுத்து உட்பட ஆறு பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து, மாரிமுத்து, வசந்த், காசியை கைது செய்தார்.
--