/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 3 பேரிடம் விசாரணை
/
போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 3 பேரிடம் விசாரணை
ADDED : ஜன 23, 2025 01:44 AM
கம்பம்:தேனி மாவட்டம், கம்பம் வடக்குபட்டி பகுதியில் உள்ள சில வீடுகளில் போதை தடுப்பு நுண்ணறிவு போலீஸ் (என்.ஐ.பி. போலீஸ்) என கூறி பணம் பறித்த ௨ பெண்கள் உட்பட மூவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்று இரவு 8:00 மணிக்கு 2 பெண்கள், ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் சில வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவதுபோல் நடித்து ,'நாங்கள் என்.ஐ.பி. போலீஸ்' எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்.ஐ., இளையராஜா தலைமையிலான போலீசார் 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் பிடிபட்ட மூவரும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.