ADDED : நவ 02, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அரண்மனை தெரு காந்தி 60. இவரது மகனுக்கு திருமணம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு, வத்தலக்குண்டிலிருந்து அரசு பஸ்சில் பெரியகுளம் வந்தார்.
பஸ்ஸ்டாண்டிற்குள் செல்லாமல் பஸ் டெப்போ அருகே நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றனர். வடகரை அரண்மனை தெருவிற்கு காந்தி நடந்து சென்றார்.
பஸ்ஸ்டாண்ட் அருகே வடகரை பட்டாப்புளி நடுத்தெருவைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் 24. இவரது நண்பர்களான வி.ஆர்.பி., நாயுடு தெருவைச் சேர்ந்த பஷீர் அஹமது 25, முகமது பைசல் 26, ஆகிய மூவரும் கத்தியை காட்டி காந்தியை மிரட்டி ரூ.2200, அலைபேசியை பறித்துக் கொண்டனர்.
தர மறுத்து போராடிய காந்தியை அடித்து காயப்படுத்தினர். வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் மூவரையும் கைது செய்தார்.

