ADDED : நவ 02, 2025 06:08 AM

போடி: சமீபத்தில் பெய்த மழையால் போடி மீனாட்சிபுரத்தில் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
சமூகத்தில் பெய்த மழையால் போடி அருகே சாமிகுளம், செட்டிகுளம், சங்கரப்பன், பங்காருசாமி, மீனாட்சியம்மன் கண்மாய்களில் நீர் மட்டம் அதிகரித்து உள்ளது. மீனாட்சிபுரம், பொட்டல்களம் பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடந்து வருகிறது. மீனாட்சியம்மன் கண்மாய் பாசன பகுதியில் நெல் நடவு பணிகள் நடந்து வருவதால் பெண் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும், பணியாளர்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'ஆண்டுதோறும் மீனாட்சிபுரம் பகுதியில் ஒருபோக நெல் சாகுபடி நடக்கும். வயல்களில் நெல் நடவிற்கு முன்பு தண்ணீர் நிரப்பி சமன் படுத்தப்படும். சமன் செய்ய டிராக்டருடன் கூடிய இயந்திரம் வாடகைக்கு கிடைக்கிறது. இருப்பினும் காளைகள் மூலம் பரம்பு அடிப்பதில் நல்ல பலன் கிடைக்கும் என்றனர்.

