/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காரில் மோதிய காட்டு மாடு மூன்று பேர் உயிர் தப்பினர்
/
காரில் மோதிய காட்டு மாடு மூன்று பேர் உயிர் தப்பினர்
காரில் மோதிய காட்டு மாடு மூன்று பேர் உயிர் தப்பினர்
காரில் மோதிய காட்டு மாடு மூன்று பேர் உயிர் தப்பினர்
ADDED : நவ 24, 2024 07:05 AM

மூணாறு : மூணாறு அருகே காட்டினுள் இருந்து பாய்ந்து வந்த காட்டு மாடு காரில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான செண்டுவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனை சேர்ந்தவர் ஜீவா.
இவரது, மகன், மகள் ஆகியோர் பீர்மேடு அருகே குட்டிகானத்தில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அவர்களை ஜீவா நேற்று முன்தினம் காரில் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மூணாறு அருகே மாட்டுபட்டி பகுதியில் உள்ள தனியார் ஆங்கில மீடியம் பள்ளி பகுதியில் இரவு 7:30 மணிக்குச் சென்றபோது ரோட்டோரம் காட்டினுள் இருந்து பாய்ந்து வந்த காட்டு மாடு காரின் முன்பகுதியில் பலமாக மோதி கீழே விழுந்து, அதே வேகத்தில் எழுந்து காட்டிற்குள் சென்றது.
அதனை சற்றும் எதிர்பாராத ஜீவா உள்ளிட்டோர் அச்சத்தில் உறைந்தனர்.
ஜீவா சரியான நேரத்தில் காரை நிறுத்தியதால் காட்டு மாடு காயம் எதுவும் இன்றி தப்பியது. காரின் முன்பகுதி சேதமடைந்தது.
முன் புறத்தில் காட்டு மாடு மோதியதால் அனைவரும் உயிர் தப்பினர். பக்கவாட்டில் மோதி இருந்தால் கார் கவிழ்ந்து அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்க கூடும் என்பது குறிப்பிடதக்கது.