/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிநி நிறுவன ஊழியர் கொலை வாலிபர்கள் மூவருக்கு ஆயுள்
/
நிநி நிறுவன ஊழியர் கொலை வாலிபர்கள் மூவருக்கு ஆயுள்
நிநி நிறுவன ஊழியர் கொலை வாலிபர்கள் மூவருக்கு ஆயுள்
நிநி நிறுவன ஊழியர் கொலை வாலிபர்கள் மூவருக்கு ஆயுள்
ADDED : ஏப் 25, 2025 01:49 AM

தேனி:தேனி பொம்மையக்கவுண்டன்பட்டியில் முன்விரோதத்தில்  பெங்களூரு நிதிநிறுவனஊழியர் ராம்பிரசாத் 29, என்பவரை கொலை செய்த சூர்யா 24, தினேஷ் 24, மதன் 24, ஆகியமூவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
பொம்மையக்கவுண்டன்பட்டி நக்கீரர் தெரு ரமணன் 40. இவரது சகோதரர் ராம்பிரசாத் , பெங்களூரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதேபகுதியை சேர்ந்த காளிராஜ்,பிச்சைமணி 2021 மே 2ல் அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே அமர்ந்திருந்தனர். இவர்களை   வீராச்சாமி, குரு, முருகன் இழிவாக பேசினர்.இதனை ரமணன், ராம்பிரசாத் கண்டித்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்தசூர்யா, தினேஷ், மதன், 16 வயது சிறுவன்  ஆகிய நால்வரும்  ரமணன், ராம்பிரசாத்துடன்  தகராறு செய்து பின் சமாதானமாகினர். அன்று மாலை ரமணன்,ராம்பிரசாத்  டூவீலரில்  தோட்டத்திற்கு சென்றனர்.   முத்துமாரியம்மன் கோயில் அருகே சென்ற போது,முன்விரோதத்தை மனதில் வைத்து   சூர்யா உள்ளிட்ட நால்வர்   டூவீலரை வழிமறித்தனர்.
இதில்  இருவரும் கீழே விழுந்தனர்.  ராம்பிரசாத்தை  சூர்யா உள்ளிட்ட நால்வர்  கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.அவர்  தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அல்லிநகரம் போலீசார் சூர்யா, தினேஷ், மதன், 16 வயது சிறுவன் ஆகியோரை  கொலை வழக்கில் கைது செய்தனர். சிறுவன் மீதான வழக்கு தேனி இளஞ்சிறார் நீதிக்குழும விசாரணைக்குமாற்றப்பட்டது. மற்ற மூவர் மீதான வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் சூர்யா, தினேஷ், மதனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட நீதிபதிசொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.

