ADDED : அக் 18, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே குட்டியார்வாலியைச் சேர்ந்த பாண்டிக்குச் சொந்தமான பசு நேற்று காலை மேய்ச்சலுக்குச் சென்றது. குடியிருப்புக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுவை காலை 11:30 மணிக்கு புலி தாக்கியது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் பலமாக கூச்சலிட்டதால் புலி, பசுவை விட்டு சென்றது. பலத்த காயம் அடைந்த பசு உயிருக்கு போராடி வருகின்றது.
அப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று பசுக்கள் புலிகளிடம் சிக்கி பலியானதால் மக்களிடையே பீதி அதிகரித்தது. புலிகள் உள்பட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் வனத்துறையினருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக மக்கள் தெரிவித்தனர்.