/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
/
புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
புலிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
ADDED : அக் 19, 2025 09:44 PM
மூணாறு: புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்கு சொந்தமான குண்டுமலை, மாட்டுபட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் புலியின் நடமாட்டத்தை தொழிலாளர்கள் நேரில் பார்த்தனர். தவிர அப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பசுக்கள் புலிகளிடம் சிக்கி பலியாகின.
அதனால் புலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி குண்டுமலை எஸ்டேட் மற்றும் மாட்டுபட்டியில் தனியார் ஆங்கிலம் மீடியம் பள்ளி ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் தலா 2 கேமராக்கள் வீதம் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கேரமாக்களில் புலிகளின் நடமாட்டம் பதிவாகும் பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மூணாறு வனத்துறை அதிகாரி பிஜூ தெரிவித்தார்.