UPDATED : அக் 18, 2026 04:29 PM
ADDED : அக் 18, 2026 04:25 PM
மூணாறு: மூணாறு பகுதியில் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராக்களில் புலிகளின் நடமாட்டம் பதிவானது.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. புலிகள் தாக்கி பசுக்கள் பலியாவதால், புலிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை எழுந்தது.
இதனால் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். பரம்பிகுளம் வனப்பிரிவில் இருந்து 74 கண்காணிப்பு கேமராக்களை கொண்டு வரப்படட்ன. அவற்றை மூணாறு பகுதியில் பாம்பன்மலை, தென்மலை, கன்னிமலை, லெட்சுமி, குண்டளை சான்டோஸ் காலனி, குண்டுமலை, மாட்டுபட்டி ஆகிய பகுதிகளில் பொருத்தினர்.
அதில் மாட்டுபட்டி, குண்டுமலை ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமராக்களில் புலிகள் நடமாட்டம் பதிவானது. புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்ட பகுதிகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மூணாறு வனத்துறை அதிகாரி பிஜூ தெரிவித்தார்.
