ADDED : ஜன 17, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் மாவட்ட பாரம்பரிய வள்ளுவர் சமுதாய சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினவிழா நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
செயலாளர் முருகேசன், பொருளாளர் நாகலிங்கம் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது. துணைச் செயலாளர் ஆனந்தன், இணைச் செயலாளர் குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.