நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் அருகே கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கண்டமனூர் எஸ்.ஐ.வேல்முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்தனர்.
அரசு பாலிடெக்னிக் எதிரில் இருந்த பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டதில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கூல் லிப் பாக்கெட்டுகள் இருந்துள்ளன.
இவற்றை பறிமுதல் செய்து சமத்துவபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் 60, என்பவரை போலீசார் கைது செய்து ரூ.2190 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.