ADDED : ஜூன் 19, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: தங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள கடைகளில் கடமலைக்குண்டு எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தங்கம்மாள்புரம் விநாயகர் கோயில் திருமண மண்டபம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 71 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சுரேஷ் 45 என்பவரை கைது செய்தனர்.