ADDED : நவ 22, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கதிர்நரசிங்கபுரம் வாட்டர் டேங்க் அருகில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பஞ்சவர்ணம் 63, என்பவரை கைது செய்தனர். டி.மீனாட்சிபுரம் நடுத்தெருவில் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.720 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் வேலுச்சாமி 69, என்பவரை கைது செய்தனர்.

