/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சம்பா சாகுபடியில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இன்று இறுதி நாள்: விவசாய அடையாள அட்டை தேவையில்லை

ADDED : டிச 01, 2025 06:17 AM
தேனி: ''சம்பா சாகுபடியில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இன்று (டிச.1) இறுதி நாள்.'' என, வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி தெரிவித்தள்ளார்.
அவர் கூறியிருப் பதாவது: காப்பீடு செய்ய விவசாய அடையாள அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தவிர குத்தகை விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவு செய்யலாம்.
நடப்பு பருவ அடங்கல், ஆதார், பட்டா, சிட்டா நகல், வங்கிக் கணக்கின் புத்தக நகல் ஆகியவற்றுடன் ஒரு ஏக்கருக்கு ரூ.571 பிரீமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்யலாம்.
இயற்கை பேரிடர் உள்ளிட்ட ஏதேனும் இடர்களால் நெல் பாதிக்கப்பட்டால் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.38 ஆயிரத்து 38 கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.