/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்குகோரி சுங்கச்சாவடி முற்றுகை
/
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்குகோரி சுங்கச்சாவடி முற்றுகை
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்குகோரி சுங்கச்சாவடி முற்றுகை
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்குகோரி சுங்கச்சாவடி முற்றுகை
ADDED : ஜூன் 01, 2025 12:33 AM

தேனி,: உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி சின்னமனுார் இலகு ரக வாகன உரிமையாளர், ஓட்டுநர்கள் சங்கத்தினர் உப்பார்பட்டி சுங்கசாவடியை முற்றுகையிட்டனர்.தேனி --குமுளி பைபாஸ் ரோட்டில் உப்பார்பட்டியில் சுங்கசாவடிஉள்ளது.
இந்த சுங்கசாவடியில், ' பாஸ்ட்டேக்கில் குறைந்த பணம் இருந்தால் அனுமதிப்பதில்லை, சின்னமனுார் - தேனி இடையே உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சின்னமனுார்இலகு ரக வாகன உரிமையாளர், ஓட்டுநர்கள்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்டவர்கள் மற்றும் சுங்கசாவடி ஊழியர்களிடம் வீரபாண்டி எஸ்.ஐ., கணேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
வாகன உரிமையாளர்கள் கோரிக்கைகளை மனுவாக எஸ்.பி.,யிடம் அளிக்கும் படி போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். கோரிக்கையை வலியுறுத்தி தேனி டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.