/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
/
வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
ADDED : ஜன 02, 2026 05:45 AM
தேனி: மாவட்டத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் தேனி, வருஷநாடு, சின்னமனுார், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி வரத்து இல்லை. சீதோஷ்ண நிலை மாறுபாட்டல், இலைக்கருகள் நோய்களால் தக்காளி மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு தக்காளி கொண்டு வரப் படுகிறது.
இதனால் சில்லரை விற்பனையில் கிலோ ரூ. 70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. விலை அதிகரித்து இருந்தாலும் விளைச்சல் இல்லை. சீதோஷ்ண நிலைமாற்றத்தால் தக்காளி சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றத்தால் தக்காளி மகசூல் குறைந்து வருகிறது என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

