தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/விளைச்சல் குறைந்ததால் தக்காளி விலை உயர்வு

விளைச்சல் குறைந்ததால் தக்காளி விலை உயர்வு

விளைச்சல் குறைந்ததால் தக்காளி விலை உயர்வு


UPDATED : அக் 13, 2026 04:29 PM

ADDED : அக் 13, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:29 PM ADDED : அக் 13, 2026 04:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி பகுதியில் தக்காளி விளைச்சல் குறைந்தும்,ஆந்திராவில் இருந்து வரத்தும் நின்றதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

ஆண்டிபட்டி பகுதியில் தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராஜதானி, கதிர்நரசிங்கபுரம், புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி உட்பட பல கிராமங்களில் தக்காளி விளைச்சல் உள்ளது. இப்பகுதியில் விளையும் தக்காளி உள்ளூர் தேவையுடன் மதுரை, சென்னை மார்க்கெட் கொண்டு செல்லப்படுகிறது. வறட்சியால் நடப்பு பருவத்தில் விவசாயிகள் பலரும் தக்காளி சாகுபடி பரப்பை குறைத்துக் கொண்டனர். சீசன் நேரத்தில் தினமும் 3 முதல் 5 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். சாகுபடி பரப்பு குறைந்ததால் தற்போது ஒரு டன் அளவு கூட ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு வரத்து இல்லை.

வியாபாரிகள் கூறியதாவது: தக்காளி விளைச்சல் குறையும்போது தேவையை ஈடு செய்வதற்காக ஆந்திராவிலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில வாரங்களாக ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து நின்று விட்டது. கடந்த சில நாட்களில் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.400 முதல் ரூ.500 வரை இருந்தது. நேற்று 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.600 வரை விலை உயர்ந்துள்ளது. மழை துவக்கினால் தக்காளி விளைச்சல் பாதிப்படையும் இதனால் வரும் காலங்களில் தேவை அதிகரிப்பால் இன்னும் விலை ஏறும் வாய்ப்புள்ளது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us