/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை தேரோட்டம் சின்னமனுாரில் விழாக்கோலம்
/
நாளை தேரோட்டம் சின்னமனுாரில் விழாக்கோலம்
ADDED : மே 08, 2025 03:51 AM
சின்னமனூர்: சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று திருக்கல்யாணம் நடக்க உள்ள நிலையில், நாளை (மே 9 ல்) சித்திரைத் தேரோட்டம் நடக்க உள்ளது. இதனால் சின்னமனுார் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சின்னமனுாரில் பழமையும் பிரசித்தி பெற்றதுமான இக்கோயிலின் திருத்தேரோட்டம் கடந்த 2022க்கு பின் நடக்க வில்லை. கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கடந்த மே 1 ல் கொடி ஏற்றம் நடந்தது.
தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. மே 8ல் (இன்று) சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து மே 9ல் மாலை தேரோட்டம் நடக்க உள்ளது. இரண்டு நாட்கள் நடக்க உள்ள இந்த தேரோட்ட நிகழ்ச்சிகளுக்காக நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

