/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப்பொருளுடன் சுற்றுலா பயணி கைது
/
போதைப்பொருளுடன் சுற்றுலா பயணி கைது
ADDED : ஆக 29, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே வட்டவடை, கோவிலூர் பகுதிக்கு தேவிகுளம் எஸ்.ஐ. சார்லிதாமஸ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் தனியார் தங்கும் விடுதியின் முன்பு நின்று கொண்டிருந்த மலப்புரத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி சக்கரியாயூசுப் 32, போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது எம்.டி. எம்.ஏ. எனும் போதை பொருள் 250 மி.கிராம் சிக்கியது. சக்கரியாயூசுப்பை போலீசார் கைது செய்தனர்.