/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கிக்கு கோடையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
/
இடுக்கிக்கு கோடையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இடுக்கிக்கு கோடையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இடுக்கிக்கு கோடையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:58 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு கீழ் வாகமண் மலை குன்று, சாகச பூங்கா, மாட்டுபட்டி அணை, இடுக்கி ஹில் வியூ பூங்கா, ராமக்கல்மேடு, மூணாறு தாவரவியல் பூங்கா, ஆமைபாறை, அருவிகுழி, பாஞ்சாலிமேடு, எஸ். என். புரம் ஆகிய சுற்றுலா மையங்கள் உள்ளன. அவற்றிற்கு கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 11,02,296 பயணிகள் வருகை தந்தனர்.
இதே கால அளவில் கடந்தாண்டு 10,30,485 பேர் வந்தனர். இது கடந்தாண்டை விட இந்தாண்டு 7784 பேர் அதிகமாகும். இந்தாண்டு மே மாதம் மட்டும் 5,45,784 பயணிகள் வந்தனர். கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் 8,49,016 பயணிகள் வந்த நிலையில் இதே கால அளவில் இந்தாண்டு எண்ணிக்கை 9,38,152 ஆக அதிகரித்தது. இது கடந்தாண்டை விட 89,136 பேர் அதிகமாகும்.
அதிகம்: மாவட்டத்தில் பிற பகுதிகளை விட வாகமண்ணுக்கு அதிக பயணிகள் வருகை தந்தனர். அங்குள்ள சாகச பூங்காவுக்கு கடந்த மூன்று மாதங்களில் 3,30,726 பேர், மலைகுன்றுக்கு 2,89,755 பேர் சென்றனர். மூணாறு தாவரவியல் பூங்கா மூன்றாம் இடத்தை பிடித்தது. அதனை கடந்த மூன்று மாதங்களில் 2,05,323 பேர் ரசித்தனர்.