/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
/
டூவீலர் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
ADDED : பிப் 10, 2025 05:16 AM

மூணாறு: மூணாறு அருகே செம்மண்ணார், கேப் ரோட்டில் பைசல்வாலி சொக்கர்முடி அருகே பாறைகடவு பகுதியில் டூவீலர் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலாப் பயணி ரஷீத் 18, இறந்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே சங்கரகுளம் பகுதியைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் இணைந்து 2 டூவீலர்களில் நேற்று மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். ரஷீத் 18, சுஜீத் 18, ஆகியோர் ஒரு டூவீலரில் சென்றனர்.
மூணாறு அருகே சின்னக்கானல் பகுதிக்கு சென்றவர்கள் செம்மண்ணார், கேப் ரோடு வழியாக பைசன்வாலி நோக்கி சென்றனர். அப்போது சொக்கர்முடி அருகே பாறைகடவு பகுதியில் ஆபத்து நிறைந்த இறக்கத்தில் ரஷீத், சுஜீத் ஆகியோர் சென்ற டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் ரஷீத் இறந்தார். அடிமாலியில் தனியார் மருத்துவமனையில் சுஜீத்தை அனுமதித்தனர். ராஜாக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அதிகரிப்பு
செம்மண்ணார், கேப் ரோடு 2 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பின் விபத்துகள் அதிகரித்துள்ளன. நேற்று வரை 31 விபத்துகள் நிகழ்ந்தன.
11 பேர் பலியாகினர். விபத்துகளில் டூவீலர்கள் அதிகம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

