/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : செப் 26, 2024 05:47 AM
கம்பம்: சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
சுருளி அருவி சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல் ஆன்மிக தலமாகவும் உள்ளது. மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறப்பு பெற்ற தலமாகும். கோடை காலங்களில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விடும்.
இந்தாண்டு சில வாரங்களாக அருவியில் நீர் வரத்து குறைந்து வருகிறது. தற்போது ஒரு சிலர் மட்டுமே நின்று குளிக்குமளவிற்கு தண்ணீர் விழுகிறது. இந்த நிலை நீடித்தால் சுருளி அருவியில் அடுத்த சில நாட்களில் தண்ணீர் விழுவது நின்று விடும்.
கம்பம் பகுதியில் இருப்பவர்களுக்கு அருவியின் நிலைமை தெரியும். ஆனால் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், அருவிக்கு வந்து குறைவான தண்ணீரை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தினமும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இது தொடர்பாக ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில் , கடந்த ஒரு மாதமாக மழை இல்லாததால் அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் தெரிகிறது. எனவே அருவியில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது என்றார்.

