/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை நீர்த்தேக்கத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
வைகை அணை நீர்த்தேக்கத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
வைகை அணை நீர்த்தேக்கத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
வைகை அணை நீர்த்தேக்கத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : ஆக 19, 2025 12:55 AM
ஆண்டிபட்டி; பரந்து விரிந்த வைகை அணை நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை மற்றும் பூங்காக்கள் உள்ளன. கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை அழகையும் ரசித்து செல்கின்றனர். வைகை அணை நீர்மட்டம் முழு அளவை நெருங்கும்போது நீர்த்தேக்கப் பரப்பு 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்து இருந்திருக்கும்.
தற்போது வைகை அணையின் நீர்த்தேக்கம் குன்னூர் ஆறு வரை விரிவடைந்துள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 69.72 அடியாக உள்ளது. அணை உயரம் 71 அடி. காற்றில் ததும்பும் வைகை அணை நீர்த்தேக்கம் சுற்றுலா பயணிகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்துவதால், பலரும் ஆர்வத்துடன் ரசித்துச் செல்கின்றனர்.