/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கி அணையை பார்க்க அனுமதி அளிக்கப்படுமா சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
/
இடுக்கி அணையை பார்க்க அனுமதி அளிக்கப்படுமா சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
இடுக்கி அணையை பார்க்க அனுமதி அளிக்கப்படுமா சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
இடுக்கி அணையை பார்க்க அனுமதி அளிக்கப்படுமா சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 09, 2025 03:52 AM

மூணாறு: 'ஓணம் பண்டிகை நெருங்குவதால் இடுக்கி அணையை பார்க்க அனுமதி அளிக்க வேண்டும்' என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளது. இரு அணைகளுக்கும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.
ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடை சீசன் ஆகிய நாட்களில் மட்டும் அணையை பார்க்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அணை அருகில் உள்ள குறவன், குறத்தி மலைகளில் இருந்து பாறைகள் சரிந்ததை தடுக்கவும், செருதோணி அணை ஷட்டர்களை பரிசோதிப்பதற்கு சாய்வு பாதை அமைக்கவும் ஜூன் ஒன்று முதல் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பலத்த மழை, நீர்மட்டம் உயர்வு ஆகிய காரணங்களால் பணிகள் செய்ய இயலவில்லை. இருப்பினும் அணையை பார்க்க அனுமதி இல்லை என்பதை அறியாமல் தினமும் வரும் ஏராளமான பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.5ல் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அணை திறக்கப்படுமா என, சுற்றுலாப் பயணிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணையை பார்க்க பயணிகளுக்கு அனுமதி அளிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என, மின் வாரியம் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.
அரசின் முடிவை எதிர் நோக்கி அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தற்போது அணையில் 71 சதவீதம் நீர்இருப்பு உள்ளதால் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.