/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாறுபட்ட தட்பவெப்ப நிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
/
மாறுபட்ட தட்பவெப்ப நிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மாறுபட்ட தட்பவெப்ப நிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மாறுபட்ட தட்பவெப்ப நிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 13, 2025 12:33 AM

மூணாறு: மூணாறில் நேற்று பகலில் மழை, வெயில், மழை மேகம் என மாறுபட்ட தட்பவெப்ப நிலை நிலவியது.
மூணாறில் தென்மேற்கு பருவ மழை மே, ஜூன் மாதங்களில் அதிகரித்து சாதனை ஏற்படுத்தியது. ஜூலை ஒன்று முதல் மழை குறைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 10:00 மணி வரை பலத்த மழை பெய்தது.
அதன் பிறகு மழை பெய்ததற்கான அறிகுறி இன்றி வெயில் சுட்டெரித்தது. மதியம் 2:00 மணிக்கு பிறகு மாலை வரை மழை மேகங்கள் சூழ்ந்தன. இந்த மாறுபட்ட தட்பவெப்ப நிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
மகிழ்ச்சி: தற்போது பருவ மழை குறைந்த போதும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆரவாரம் இன்றி அமைதியுடன் கொட்டுகிறது. குறிப்பாக கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து தேனி செல்லும் ரோட்டில் 13 கி.மீ., தொலைவில் உள்ள பெரியகானல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பால் போன்று வெண்மையாக கொட்டுகிறது. அந்த ரம்மியமான தோற்றத்தை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இந்த நீர்வீழ்ச்சியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்தவாறு ரசிக்கலாம்.