/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ADDED : அக் 13, 2024 05:35 AM

பெரியகுளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான வட்டக்கானல், பாம்பார்புறம், வெள்ளகெவி, பகுதி மற்றும் கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் வரத்து சீராகும் வரை அருவியின் நுழைவு கேட் பூட்டப்பட்டது. கடந்த வாரம் அக்.6 ல் வெள்ளப்பெருக்கின்போது தடையும், அக்.8,ல் நீர் வரத்து குறைவு காரணமாக
குளிக்க அனுமதிக்கப்பட்டது.
எச்சரிக்கை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை காரணமாக சிலர் கும்பக்கரை தண்ணீர் செல்லும் ஆற்றுப் பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்க செல்கின்றனர். சில வாரங்களுக்கு முன் கும்பக்கரை ஆற்றில் குளிக்கும் போது வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் உயிருடன் மீட்டனர். எனவே இன்று (அக்.13) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யாரும் கும்பக்கரை தண்ணீர் செல்லும் ஆற்றுப் பகுதியில் குளிக்க கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
--